×

பலே கில்லாடிகள் ; ஜவுளிக்கடையில் புடவைகளை திருடிவிட்டு காவல் நிலையத்திற்கு சேலைகளை பார்சலில் அனுப்பிய ஆந்திர கும்பல்..!!

சென்னை: சென்னை பெசண்ட்நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் புடவைகளை திருடி சென்ற கும்பலை சிசிடிவி மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துணிகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த அடிப்படையில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் திருட்டு கும்பல் வர வாய்ப்புள்ளதாக கூறி போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

சென்னை பெசன்ட் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் குறிப்பாக சாஸ்திரி நகர் உட்பட பகுதியில் துணிக்கடையில் பெண்கள் விலை உயர்ந்த புடவைகளை திருடும் சம்பவம் என்பது நிகழ்துள்ளது. விலை உயர்ந்த புடவைகளை திருடும் கடைகளிலிருந்து புகார்கள் சாஸ்திரிநகர் காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையாக வைத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுமார் 7 பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

அங்கு விற்பனையில் உள்ள பெண்களிடம் அவர்கள் தோற்றம் குறித்தும், பேசும் விதம் குறித்தும் கேட்டறிந்த போது வெளிமாநிலத்தில் இருந்து வந்து திருடும் கும்பல் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து வெளிமாநிலத்திலிருந்து இது போன்று புடவைகளை நூதனமாக திருடும் கும்பல்கள் யார் யார் என்ற அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அண்டை மாநிலத்திலுள்ள ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட காவல் நிலையத்திற்கும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அனுப்பி தகவல்களை கேட்டறிந்தனர்.

அப்போது விஜயவாடாவை சேர்ந்த போலீசாரிடம் இதுகுறித்த தகவல்களை தெரிவித்தனர். அங்கிருக்கும் கும்பல்கள் விழா காலங்களில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று இது போன்று விலை உயர்ந்த புடவைகளை திருடி கொள்ளை அடிப்பது வாடிக்கையாக கொண்டுள்ள கும்பல் என்பதை தகவல் தெரிவித்தார் . தொடர்ந்து விஜயவாடா போலீசார் அந்த பெண்கள் கும்பலை கைது செய்ய முற்பட்டபோது அந்த பெண்கள் கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் இந்த திருட்டு வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும். எனவே தாங்கள் திருடிய புடவைகளை பார்சலாக சாஸ்திரிநகர் காவல் நிலையத்திற்கே அனுப்பியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் இன்று பண்டல் பண்டலாக புடவைகள் வந்த போது முதற்கட்டமாக இது தீபாவளி பரிசு என நினைத்து காவல்துறையினர் பிரித்து பார்த்திருக்கின்றனர். அதன் பிறகு விலை உயர்ந்த புடவைகள் என்பது தெரியவந்தது. விஜயவாடா போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இவை அனைத்தும் உங்கள் மாவட்டத்தில் உள்ள கடைகளில் திருடிய புடவைகள் என தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு கடைகளில் சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான புடவைகள் திருடிய பெண்கள் பண்டலாக, பார்சல் அனுப்பியது தெரியவந்தது. அந்த பெண்களை கைது செய்வதற்காக சென்னை போலீசார் ஆந்திராவிற்கு செல்ல இருக்கின்றனர்.

The post பலே கில்லாடிகள் ; ஜவுளிக்கடையில் புடவைகளை திருடிவிட்டு காவல் நிலையத்திற்கு சேலைகளை பார்சலில் அனுப்பிய ஆந்திர கும்பல்..!! appeared first on Dinakaran.

Tags : Bale Gilladis ,AP ,Chennai ,Besandnagar, Chennai ,Diwali ,Bale Gilladies ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...